பிரதி அதிபர் செய்தி
Mr.K.கோணேஸ்வரமூர்த்தி
பூமிக்கு ஒளி தரும் சூரியனைப் போல மாணவர்க்கு ஒளி தரும் கல்லூரியாய் கிழக்கிலங்கையின் மட்டுமா நகரை அண்மித்த கருவேப்பங்கேணியில் விபுலாந்தரின் நாமம் கொண்டு தரம் 1 தொடக்கம் 13 வரையான வகுப்புக்களையூடைய பாடசாலையாக “அறிக தௌpக ஆற்றுக” எனும் மகுடவாசகத்தை சுமந்து கொண்டு மட்ஃவிபுலாநந்தா கல்லூரி குன்றென நிமிர்ந்தோங்கியூள்ளது.
இக் கல்லூரியானது சுமார் 63 வருட பழமை வாய்ந்த வரலாற்றினை கொண்டதாகவூம் வித்தியாலயமாய் இருந்து கல்லூரியாய் வளர்ந்த ஒரு கலவன் பாடசாலையாகவூம் சுமார் 500 ஜ எட்டிய மாணவர் தொகையையூம் கொண்ட சைவமும் இகிறிஸ்தவமும் கலந்த மாணவர் கற்கும் பாடசாலையாகவூம் இது திகழ்கின்றது.
கல்லூரியின் வாசலிலே விபுலாந்தரின் சிலை சிரிக்க முன்றிலில் பூமரங்கள் பூத்துக்குலுங்க மாடிக்கட்டிடங்களுக்கிடையே அழகிய மரங்கள் காற்றிசைக்க மாசற்ற ஆசான்கள் கற்பித்தலில் வீறுநடைபோட மாணவர்கள் கற்றலில் கவிபாடும் இடமாக இக்கல்லூரி அமைந்துள்ளது.
கடங்த 2, 3 வருடங்களாக இக்கல்லூரியின் கற்றல் அடைவானது வியக்கத்தக்க வகையில் க.பொ.த(சாஃத) தரத்தில் கடங்த ஆண்டு பெறுபேறுகள் 100 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளதுடன் க.பொ.த. உயர்தர பெறுபேறுகள் 85 வீதமாகவூம் உயர்ங்துள்ளது. அத்துடன் இனைப்பாடவிதான செயற்பாடுகளிலும் முக்கியமாக விளையாட்டில் எமது மாணவர்கள் தேசிய இ மாகாண மட்டம் வரை சென்று இக்கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விபுலாந்நதரின் புகழ்பாடும் மட்டுமாநகரில் அவரின் நாமம் கொண்ட இக்கல்லூரியூம் கற்றல் கற்பித்தலிலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் மேலோங்கிய சிறந்த பெறுபேறுகளை சமூகத்திற்கு பெற்றுத்தரும் கல்லூரியாய் திகழ்வதில் நாமும் பெருமையடைகின்றௌம்.
Mr.K.கோணேஸ்வரமூர்த்தி
துணை அதிபர்
மட்/விபுலானந்தா கல்லூரி கருவப்பங்கேணி.





